உலகம்

தாலிபான்கள் மீதான தடையை நீக்கிய ரஷ்யா!

Published

on

Loading

தாலிபான்கள் மீதான தடையை நீக்கிய ரஷ்யா!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி மீதான தடையை ரஷ்ய உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.

அந்நாட்டு சட்டமா அதிபர் அலுவலகத்தின் வேண்டுகோளின் பேரில் நீதிமன்றத்தின் முடிவு எடுக்கப்பட்டது.

Advertisement

ரஷ்யா கடந்த 2003ஆம் ஆண்டு தாலிபான்களை தடைசெய்தது, அதை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்திருந்தது.

இந்நிலையிலேயே, ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி மீதான தடையை ரஷ்ய உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.

இதேவேளை, இந்தப் பிராந்தியத்தில் ஒரு பெரிய சக்தியாக மாற முயற்சிக்கும் ரஷ்யா, பல்வேறு நிகழ்வுகளுக்கு தாலிபான் பிரதிநிதிகளை மீண்டும் மீண்டும் அழைத்துள்ளது.

Advertisement

கடந்த ஜூன் மாதம் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் தாலிபான்கள் பங்கேற்றனர்.

பெண்களின் சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகள் மீதான ஒடுக்குமுறைக்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட தாலிபானுக்கு ரஷ்ய நடவடிக்கை ஒரு பெரிய அரசியல் வெற்றியாகும்.

மேலும், 2021 ஆம் ஆண்டு அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டதிலிருந்து ஆப்கானிஸ்தானுடனான உறவுகளை வலுப்படுத்த ரஷ்யா நடவடிக்கை எடுத்து வருகிறது.

Advertisement

தலைநகரான காபூலில் ஒரு இராஜதந்திர பிரசன்னத்தைக் கொண்ட நாடாகவும் ரஷ்யா உள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version