இலங்கை
புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி விடுத்த முக்கிய கோரிக்கை
புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி விடுத்த முக்கிய கோரிக்கை
புலம்பெயர்ந்த தமிழர்கள் வடக்கு கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் பல தமிழர்கள் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் தற்போது செல்வந்தர்களாக வெளிநாடுகளில் வசிக்கிறார்கள்.
மீண்டும் அவர்கள் வடக்கு கிழக்கிற்குத் திரும்பி முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கில் வசிக்கின்ற மக்களது நலனுக்காக அவர்களிடத்தில் இந்த அழைப்பை விடுக்கிறேன்.
வடக்கில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் தெங்கு உள்ளிட்ட பயிர்செய்கையை மேற்கொள்ளலாம். அரசாங்கம் என்ற அடிப்படையில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.