இலங்கை
மூன்று கோடி ரூபா பணத்துடன் கான்ஸ்டபிளுடன் கைதான நால்வர் ; வழங்கப்பட்ட அதிரடி உத்தரவு
மூன்று கோடி ரூபா பணத்துடன் கான்ஸ்டபிளுடன் கைதான நால்வர் ; வழங்கப்பட்ட அதிரடி உத்தரவு
மாத்தறை தேவேந்திரமுனை பகுதியில் சுமார் 3 கோடி ரூபாய் பணத்துடன் கைதுசெய்யப்பட்ட கான்ஸ்டபிள் உட்பட ஐந்து சந்தேகநபர்களையும் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சோதனை பணிகளில் ஈடுபட்டிருந்த தேவேந்திரமுனை காவல்துறை விசேட அதிரடிப்படையினர், சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த மகிழுந்தொன்றை நிறுத்திச் சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, அதிலிருந்து 3 கோடியே 28 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ரூபாய் பணத்தையும், 150 கிராம் தங்க நகைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
அதனையடுத்து மேற்கொண்ட விசாரணைகளில், மகிழுந்தைச் செலுத்திய நபர் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
குறித்த பணம் வெளிநாட்டில் வசிக்கும் தமது சகோதரியிடமிருந்து பெறப்பட்டதாகச் சந்தேகநபரான கான்ஸ்டபிள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
எனினும், விசாரணைகளின் போது அளிக்கப்பட்ட வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருப்பதால் அவர்கள் மேலதிக விசாரணைக்காகக் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், நேற்றைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு, 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து அவர்களை விசாரிப்பதற்கு அனுமதி பெற்றுள்ளதாகக் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தினர் தெரிவித்துள்ளனர்.