இலங்கை

மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு மூன்று பதக்கங்கள்

Published

on

மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு மூன்று பதக்கங்கள்

18 வயதுக்குட்பட்ட ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் இன்று (18) நடைபெற்ற தடகளப் போட்டியில் தருஷி அபிஷேகா தங்கப் பதக்கம் வென்றார்.

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் 2 நிமிடங்கள் 14.86 வினாடிகளில் போட்டியை முடித்து அவர் தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.

Advertisement

இதுதவிர, இன்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஷவிந்து அவிஷ்க வெண்கலப் பதக்கம் வென்றார்.

1 நிமிடங்கள் 53.41 வினாடிகளில் தனது பந்தயத்தை முடித்த அசிந்த இந்தப் பதக்கத்தை அடைந்தார்.

இதே​வேளை, பவன் நெத்ய சம்பத் ஆண்கள் உயரம் தாண்டுதல் போட்டியில் (2.03 மீ) வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version