சினிமா
உச்சக்கட்ட கஷ்டமான நாட்கள்…திருமணத்திற்கு பின் விஜே பிரியங்கா வெளியிட்ட வீடியோ வைரல்..
உச்சக்கட்ட கஷ்டமான நாட்கள்…திருமணத்திற்கு பின் விஜே பிரியங்கா வெளியிட்ட வீடியோ வைரல்..
விஜே பிரியங்கா, டிஜே வசி என்பவரை திடீரென ஏப்ரல் 16 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவரின் திருமணத்திற்கு பலர் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தாலும், சிலர் ஏன் திடீர் திருமணம் என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.மேலும் பிரியங்கா – வசி திருமணத்திற்கு, விஜய் டிவி பிரபலங்கள், அமீர், பாவ்னி ரெட்டி, நிரூப், அன்ஷிதா, மதுமிதா, சுனிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பிரியங்காவின் திடீர் திருமணம் குறித்து சில நாட்களாகவே ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.இந்நிலையில் திருமணத்திற்கு பின் விஜே பிரியங்கா ஒரு வீடியோவை பகிர்ந்து நன்றிகளை தெரிவித்துள்ளார். என்னுடைய மகிழ்ச்சியான பக்கத்தை பார்த்து அளவிள்ளா அன்பை கொடுத்து வருகிறீர்கள். அதற்கு என் வேலை நான் சரியாக செய்கிறேனா? என்று யோசித்து அதைநினைத்து மகிழ்ச்சியாவேன்.உச்சக்கட்ட கஷ்டமான நாட்களை கடந்து வந்ததற்கு நீங்கள் உதவி இருக்கிறீர்கள். பிரியங்கா உனக்கு இவ்வளவு பேர் இருக்கிறோம் என்று அன்பு செலுத்துகிறீர்கள் அதற்கான நான் உங்களை எண்டர்டெண்ட்மெண்ட் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.பிரியங்காவின் இந்த வீடியோ பழையதா அல்லது திருமணத்திற்கு பின் வெளியிட்ட வீடியோவா என்று தெரியவில்லை. தற்போது இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.