சினிமா

சிங்கத்துக்கும் புலிக்கும் அப்பாவாகும் பிரபல நடிகர்..! வெளியான அதிர்ச்சித் தகவல் இதோ..!

Published

on

சிங்கத்துக்கும் புலிக்கும் அப்பாவாகும் பிரபல நடிகர்..! வெளியான அதிர்ச்சித் தகவல் இதோ..!

தமிழ் சினிமாவில் திறமையான நடிப்பு மற்றும் நேர்த்தியான நகைச்சுவை ஹீரோவாக பிரபலமானவர் நடிகர் சிவகார்த்திகேயன்.  டாக்டர், டான், அயலான் உள்ளிட்ட படங்களால் ரசிகர்களின் மனதை வென்ற சிவகார்த்திகேயன் தற்பொழுது தனது சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகளின் நலன் குறித்த அக்கறையை உணர்வு பூர்வமாக செய்து வருகின்றார்.சென்னையின் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு சிங்கத்தையும், புலியையும் தத்தெடுத்து, அவற்றின் பராமரிப்பிற்கான செலவுகளை முழுமையாக ஏற்று, தன்னுடைய சமூக பொறுப்பை உணர்த்தியுள்ளார் சிவகார்த்திகேயன்.சென்னை வண்டலூர் பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய உயிரியல் பூங்காவில் பல்வேறு வகையான உயிரினங்கள் பாதுகாப்புடன் பராமரிக்கப்படுகின்றன. அங்கு உள்ள புலிகள், சிங்கங்கள் உள்ளிட்ட பாதுகாக்கப்பட வேண்டிய விலங்குகளின் பராமரிப்பிற்கு மிகுந்த செலவு ஏற்படுகின்றது.அதை உணர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன், அந்த பூங்காவில் உள்ள ஒரு ஆண் சிங்கம் மற்றும் பெண் புலி ஆகியவற்றை 3 மாதங்களுக்கு தத்தெடுத்துள்ளார். இதன் மூலம், அந்த விலங்குகளின் உணவு, மருத்துவம், பராமரிப்பு ஆகியவற்றுக்கான முழு செலவையும் அவர் ஏற்றுள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த செயல் அனைத்து திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version