இலங்கை

சென்றுக்கொண்டிருந்த கார் மீது உருண்டு விழுந்த பாறைகள் ; விபத்தில் சிக்கிய 4 இளைஞர்கள்

Published

on

சென்றுக்கொண்டிருந்த கார் மீது உருண்டு விழுந்த பாறைகள் ; விபத்தில் சிக்கிய 4 இளைஞர்கள்

ஹல்துமுல்ல நகருக்கு அருகில் மலையிலிருந்து பல பாறைகள் உருண்டு  விழுந்ததில் கடவத்தையிலிருந்து பண்டாரவளை நோக்கிச் சென்ற கார் ஒன்று கடுமையாக சேதமடைந்ததாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

காரில் நான்கு பேர் பயணித்ததாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், கார் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவிதுள்ளனர்.

Advertisement

இன்று காலை 7.30 மணியளவில்  கடவத்தையிலிருந்து பண்டாரவளைக்கு  பயணம் செய்து கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.

தற்போது பெய்து வரும் மழையால் மலைச் வீதிகளுக்கு மேலே உள்ள மலைகளில் இருந்து பாறைகள் கீழே விழுந்துள்ளதால், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடனும் வாகனம் ஓட்டுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version