சினிமா

தல படத்தைப் பார்க்க கூட நேரமில்லை..! அப்புடி எந்தப் படத்தில பிஸியா இருக்காங்க லைலா..!

Published

on

தல படத்தைப் பார்க்க கூட நேரமில்லை..! அப்புடி எந்தப் படத்தில பிஸியா இருக்காங்க லைலா..!

தமிழ் சினிமாவில் ஒளிர்ந்த அழகிய நடிகைகளில் ஒருவர் லைலா. 90களின் இறுதிப் பருவத்தில் தமிழ் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்ட இவர், உன்னை நினைத்து , நந்தா , பிதா மகன் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் சிறப்பாக நடித்து மக்களின் கவனங்களைப் பெற்றார். திருமணத்துக்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகியிருந்த லைலா, சமீபகாலமாக மீண்டும் திரையுலகிற்குள் படிப்படியாக நுழைந்து வருகின்றார். அதிலும் முக்கியமாக, பழைய காதல் கதைகளைவிட புதிய வித்தியாசமான கதாப்பாத்திரங்களைத் தேர்வு செய்து புதிய அவதாரத்தில் ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகவுள்ளார்.சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு முக்கியமான ஊடகவியலாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை லைலா, தனது எதிர்கால திட்டங்களைப் பற்றியும், தற்போது நடித்து வரும் வெப் தொடர் பற்றியும் சுவாரஸ்யமாகப் பேசியுள்ளார்.அதில் பேசும் போது, தான் சவாலான கதாப்பாத்திரங்களை மட்டுமே நடிக்க விரும்புகின்றேன் என்று கூறியிருந்தார். மேலும் “நான் நடிக்கும் கதாப்பாத்திரங்களை யாராவது கட்டாயப்படுத்தி கொடுக்கிற மாதிரி இல்லாது, நானே தேர்வு செய்து நடிக்கிறேன். அந்த வகையில், நெகட்டிவ் கதாப்பாத்திரங்களையும் சுவாரஸ்யமாகவே பார்க்கிறேன். குறிப்பாக கிரைம், சைக்கலாஜிக்கல் திரில்லர் போன்ற கதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்,” என லைலா கூறியிருந்தார்.இந்த அழகிய பேச்சுக்குப் பின், தற்போது ZEE 5ல் நேரடி ஒளிபரப்புக்கு தயாராக இருக்கும் புதிய வெப் தொடரான ‘என்கவுன்டர்’ பற்றியும் லைலா குறிப்பிட்டுள்ளார். “என்கவுன்டர் என்பது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் வெப்சீரிஸ். இதில் எனக்கு ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு பொலீஸ் மற்றும் குற்றவாளி இடையே நடைபெறும் மன அழுத்தமான விளையாட்டு,” என்று தெரிவித்தார்.அந்த நிகழ்வில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் “குட் பேட் அக்லி” பற்றியும் லைலாவிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த லைலா, நேரமில்லாததால் அதைப் பார்க்க முடியவில்லை என சிரித்தபடியே பதில் அளித்தார். மேலும் “அந்தப் படம் ரொம்ப நல்ல ரிவ்யூஸ் வாங்கிட்டு இருக்கு என்று கேட்டேன். ஆனால் நேரம் இல்லாததால் இன்னும் பார்க்க முடியல. ஆனா விரைவில் பார்க்கலாம்னு இருக்கேன்,” என்று கூறினார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version