இலங்கை

நாட்டில் மூடப்படும் 100 பாடசாலைகள் ; கல்வி அமைச்சின் அறிவிப்பு

Published

on

Loading

நாட்டில் மூடப்படும் 100 பாடசாலைகள் ; கல்வி அமைச்சின் அறிவிப்பு

மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள 100 சிறிய பாடசாலைகளை மூடுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கை இப்போது 500ஐ தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதிக எண்ணிக்கையிலான பாடசாலைகளில் இரண்டு அல்லது மூன்று மாணவர்கள் மட்டுமே உள்ளதாகவும்,  இவ்வாறான பாடசாலைகளை மூடி, அந்த மாணவர்களை வசதிகள் உள்ள பாடசாலைகளில் சேர்ப்பதற்கான முறையான திட்டத்தைத் தொடங்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள பல சிறிய பாடசாலைகள் மூடப்பட்டு, அவற்றின் மாணவர்கள் தற்போது வேறு பாடசாலைகளை அனுப்பப்படுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version