பொழுதுபோக்கு

பிக்பாஸில் உருவான காதல்: திருமண ஏற்பாடுகள் தீவிரம்: ப்ரீவெட்டிங் போட்டோஷூட் வைரல்!

Published

on

பிக்பாஸில் உருவான காதல்: திருமண ஏற்பாடுகள் தீவிரம்: ப்ரீவெட்டிங் போட்டோஷூட் வைரல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் பங்கேற்ற நடிகை பாவனி ரெட்டி மற்றும் அமீர் இடையே காதல் உருவான நிலையில், விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்ள உள்ளனர். அவர்களின் ப்ரீவெட்டிங் போட்டோஷூட் தற்போது வைரலாகி வருகிறது.பாவனி ரெட்டி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாதுறையில், பணியாற்றி வரும் நடிகை என்று அறியப்பட்ட பாவனி ரெட்டி, 2012 ஆம் ஆண்டு வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமான லாகின் மூலம் தனது திரைப்பட அறிமுகமானார்.சின்னத்திரையில் அறிமுகமான இவர், ரெட்டை வால் குருவி மற்றும் சின்ன தம்பி ஆகிய சீரியல்களில் நடித்திருந்தார். அவர் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பு ஒரு மாடலாக பணியாற்றினார்.சின்னதம்பி சீரியலில், நடித்ததற்காக 4வது விஜய் தொலைக்காட்சி விருதுகளில் அவரும் நடிகர் பிரஜினும் சிறந்த ஜோடியாக தேர்வு செய்யப்பட்டனர். பாவனி அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது புகை படங்களை ஷேர் செய்து வருபவர்.பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற பாவனி ரெட்டி வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த அமீருடன் காதலில் விழுந்தார். அதனைத் தொடர்ந்து இருவரும் ஜோடியாக பல இடங்களில் சுற்றி வருகின்றனர்.அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் பாவனி – அமீர் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், இவரும் தங்கள் சமூகவலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.இவர்களின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், நீங்கள் எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள் என்ற கேள்வியும் அடிக்கடி நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.இதனிடையே பாவனி – அமீர் திருமணம் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இவர்கள் தற்போது வெளியிட்டுள்ள ப்ரீவெட்டிங் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version