சினிமா
பிராமணரா இருந்தா ரெண்டுகலியாணம் பண்ணனுமா..? நண்பரின் கேள்விக்குப் பதிலடிகொடுத்த கமல்ஹாசன்!
பிராமணரா இருந்தா ரெண்டுகலியாணம் பண்ணனுமா..? நண்பரின் கேள்விக்குப் பதிலடிகொடுத்த கமல்ஹாசன்!
தமிழ் சினிமாவிலும், இந்திய அரசியலிலும் சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கும் பிரபலம் மற்றும் விருதுகளைக் குவித்த நடிகருமான உலகநாயகன் கமல் ஹாசன், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் கலந்துகொண்டு சில சுவாரஸ்யமான மற்றும் சிந்திக்க வைக்கும் சம்பவங்களைப் பகிர்ந்துள்ளார்.அதன்போது, அவரது நெருங்கிய நண்பர் மற்றும் மாண்புமிகு எம்.பி. திரு. பிரிட்டாஸ் அவர்களால் கேட்கப்பட்ட கேள்வி, அவரை மிகுந்த வியப்பில் ஆழ்த்தியதாகக் கூறியிருந்தார். அந்த நண்பர் அவரிடம் கேட்ட கேள்வி என்னவென்றால், “நீங்க பிராமணர் குடும்பத்தில இருந்து வந்தனீங்க ஏன் ரெண்டு கலியாணம் பண்ணல” என்று கேட்டிருந்தார்.மேலும் “நீங்க வணங்குற தெய்வம் ராமர் ஆச்சே அதையாவது பின்பற்ற வேண்டாமா?” என்றும் கேட்டிருந்தார். இந்தக் கேள்வியைக் கேட்டவுடனே கமல் ஹாசன் அதிர்ச்சியடைந்து கொண்டதாகக் கூறியிருந்தார். அத்துடன் பிராமணர் குடும்பத்திற்கும் ரெண்டு கலியாணத்திற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்டதாகவும் தெரிவித்திருந்தார்.இந்த நேர்காணல் தற்போது சமூக ஊடகங்களில் தீவிரமாகப் பகிரப்பட்டு வருகின்றது. பலரும், “பிரபல அரசியல்வாதி ஒருவர், தனி நபரின் திருமணம் பற்றிய கேள்விகளை இப்படி எழுப்புவது நியாயமா?” எனக் கருத்துக்களை எழுப்பியுள்ளனர்.