சினிமா

போடுங்கப்பா வெடிய..பிக்பாஸ் ஜனனி குறித்து தீயாய் பரவும் செய்தி..மாஸ்என்ட்ரி கம்மிங் soon.!

Published

on

போடுங்கப்பா வெடிய..பிக்பாஸ் ஜனனி குறித்து தீயாய் பரவும் செய்தி..மாஸ்என்ட்ரி கம்மிங் soon.!

தமிழ் சினிமாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளனர். அந்த வரிசையில் முக்கியமானவராக இருப்பவர் தான் நடிகை ஜனனி. மாடலிங் உலகிலிருந்து சினிமாவை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்த இவர், விஜய் டீவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மனதில் பெயர் பெற்று, திரைத்துறையிலும் அதிகளவான வாய்ப்புகளைப் பெற்றுக் கொண்டார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது எதார்த்தமான நடத்தை மற்றும் அழகு என்பன மூலம் பலரது கவனங்களை ஈர்த்தார். அவர் நிகழ்ச்சியின் போது செய்த அனைத்துக் குறும்புத்தனங்களையும் ரசிகர்கள் பெரிதும் வரவேற்றனர். இந்தப் பின்னணி தான் ஜனனிக்கு விஜயின் சூப்பர் ஹிட் திரைப்படமான லியோவில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்தது.இந்த வெற்றியின் பின், ஜனனி சில காலம் சினிமாவில் சற்று தொலைவாகவே இருந்தார். எனினும், சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ஒரு புகைப்படம் மீண்டும் திரைக்குழுவில் புதிய முயற்சி தொடங்கியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.ஜனனி பகிர்ந்த புகைப்படத்தில், நீல நிற ஆடையுடன் கழுத்தில் மாலை அணிந்து கொண்டு காட்சியளிக்கின்றார். இதனை பார்த்த ரசிகர்கள், “கம்பேக் ஜனனி…!” என்று கமெண்ட் செய்து வருகின்றார்கள். பிக்பாஸ் வீட்டிலிருந்து தற்பொழுது தனது சினிமாக் கனவைப் பூர்த்தி செய்யத் தொடங்கியுள்ள ஜனனி, இந்த புதிய படத்தின் மூலம் மேலும் பல வாய்ப்புகளைப் பெறப்போகின்றார் என்று சினிமா வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version