சினிமா

விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்குமாரின் கார்.!ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய அதிர்ச்சித்தகவல்

Published

on

விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்குமாரின் கார்.!ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய அதிர்ச்சித்தகவல்

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ என்று அழைக்கப்படும் அஜித் குமார், தன்னுடைய விருப்பங்களை நிறைவேற்றும் தன்னம்பிக்கை கொண்ட நாயகனாக அறியப்படுகின்றார். அவருடைய வாழ்க்கையில் சினிமாவுக்கு சமமாக முக்கியத்துவம் கொடுக்கும் விடயம் தான் மோட்டார் ரேஸிங்.அஜித் கார் மீது கொண்ட ஆர்வத்தால், Formula 2 மற்றும் சர்வதேச ரேஸ்களில் பங்கேற்று அதிகளவு பாராட்டுக்களைப் பெற்றுக் கொண்டார். அந்தவகையில், சமீபத்தில் அவர் பெல்ஜியம் நாட்டின் பிரபலமாக நடைபெற்ற மோட்டார் கார் ரேஸிங் பயிற்சியில் கலந்து கொண்டிருந்தார். எனினும் அந்த ரேஸிங்கின் போது அவருடைய கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இத்தகவலின் படி, நடிகர் அஜித் குமார் காரைத் திருப்பும் வளைவில் அவரது ரேஸிங் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து திரும்ப முடியாமல் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்றது. இத்தகவல் அனைத்து ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.எனினும் அந்த விபத்தின் போது அஜித் எந்தவிதமான காயமும் ஏற்படாமல் தப்பியதாகவும் அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். இந்த விபத்துச் சம்பவம், ஒரு நடிகரின் சாகசத்தை நிரூபிக்கும் வகையில் காணப்படுகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version