இலங்கை
வீதியை விட்டு விலகி கவிழ்ந்த லொறி ; மூவர் காயம்
வீதியை விட்டு விலகி கவிழ்ந்த லொறி ; மூவர் காயம்
தேயிலை கொழுந்தினை ஏற்றிச் சென்ற டிப்பர் லொறி ஒன்று (19) வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், டிப்பர் லொறியில் இருந்த மூன்று பேர் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று (19) பிற்பகல் 3.30 மணியளவில் ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் நோர்வூட் சென்ஜோண்டிலரி தோட்டப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பொகவந்தலாவ லொய்னோன் தோட்டத்திலிருந்து ஹட்டன் வனராஜா தோட்டத்திற்கு தேயிலை கொழுந்தினை ஏற்றிச் சென்ற டிப்பர் லொறியில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக லொறி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் நோர்வூட் பொலிஸார், விபத்து நடந்த நேரத்தில் டிப்பர் லொறியில் ஏழு பேர் பயணித்ததாக தெரிவித்தனர்.