இலங்கை

இன்று உயிர்த்த ஞாயிறு; கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு

Published

on

இன்று உயிர்த்த ஞாயிறு; கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு

  இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு, இலங்கையில் உள்ள கிறிஸ்தவத் தேவாலயங்களைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று விசேடப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

இது தொடர்பாக அனைத்து பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அண்மையில் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.

ஈஸ்டர் ஆராதனைக்காக அதிக எண்ணிக்கையில் வருகை தரும் தேவாலயங்களை அடையாளம் கண்டு, அவற்றைச் சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

அதன்படி, விசேடமாகப் பிரதான ஆராதனைகள் நடைபெறும் தேவாலயங்கள் குறித்த அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் பதில் பொலிஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.

Advertisement

கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் தேவாலயங்கள் மற்றும் பிரபல இடங்களில் இடம்பெற்ற குண்டுதாக்குதல்களில் பலர் உயிரிந்தமை இலங்கை வரலாற்றில் பெரும் துயரமான சம்பவம் ஆகும்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version