இலங்கை
கண்டி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து CID விசாரணை
கண்டி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து CID விசாரணை
கண்டி ‘ஸ்ரீ தலதா வழிப்பாட்டு’ நிகழ்வில் பங்கேற்ற ஒருவரால் எடுக்கப்பட்டதாக கூறப்படும் புகைப்படம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
புகைப்படத்தை எடுத்தவர் யார் அல்லது இது திருத்தி வடிவமைக்கப்பட்ட புகைப்படமா என்பதைக் கண்டறிய தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் வழிப்பாட்டு நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு தங்களது கையடக்க தொலைபேசிகளை செயல்பாட்டில் வைத்திருக்கவோ அல்லது புகைப்படம் எடுக்கவோ எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடயம் குறித்து, பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.