இந்தியா

கர்நாடக முன்னாள் டி.ஜி.பி கொலை; விசாரணை வளையத்தில் மனைவி!

Published

on

கர்நாடக முன்னாள் டி.ஜி.பி கொலை; விசாரணை வளையத்தில் மனைவி!

கர்நாடகாவின் முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி) ஓம் பிரகாஷ் (68) பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை பலத்த கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர்கள் கூறினர். முன்னாள் டி.ஜி.பி-யின் மனைவி பல்லவி பின்னர் மாலையில் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆங்கிலத்தில் படிக்க:இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். கூடுதல் காவல் ஆணையர் (மேற்கு) விகாஸ் குமார் விகாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், முன்னாள் டி.ஜி.பி-யின் உடல் அருகே கூர்மையான ஆயுதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.  “கொலைக்கு அதே ஆயுதம் அல்லது வேறு ஏதேனும் ஆயுதம் பயன்படுத்தப்பட்டதா என்பதை பின்னர் உறுதி செய்வோம்” என்று அவர் கூறினார்.பிரகாஷின் எச்.எஸ்.ஆர் லேஅவுட் இல்லத்தில் மாலை 4.30 மணியளவில் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று அதிகாரி கூறினார். “அவரது மகன் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, அதற்கேற்ப நாங்கள் வழக்கை விசாரிப்போம்” என்று அவர் கூறினார்.சம்பவம் நடந்தபோது பிரகாஷ் மனைவி பல்லவி மற்றும் மகளுடன் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலைக்குப் பின் மனைவி மற்றும் மகள் காவல்துறையினர் வருவதற்கு முன்பு ஒரு அறையில் தங்களை பூட்டிக் கொண்டனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.விகாஸ் கூறுகையில், “சம்பவம் நடந்தபோது 3 பேர் (அந்த இல்லத்தில்) இருந்தனர். இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.சொத்து தகராறு காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற ஊகம் உட்பட, கொலையைச் சுற்றியுள்ள ஊகங்களை மறுத்த போலீஸ் அதிகாரி, இது இன்னும் விசாரணையில் உள்ளது என்றார். குற்றம் நடந்த இடம் பாதுகாக்கப்பட்ட பின்னரும், உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பின்னரும் கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.பீகாரைச் சேர்ந்த பிரகாஷ் 1981-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியாவார். அவர் பெல்லாரி மாவட்டத்தில் கூடுதல் எஸ்.பி-யாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பல்வேறு மாவட்டங்களில் எஸ்.பி-யாக பணியாற்றியதுடன், லோக்யுக்தா போலீஸிலும் பணியாற்றினார் மற்றும் 2015-ல் டி.ஜி.பி-யாக பொறுப்பேற்பதற்கு முன்பு குற்றப் புலனாய்வுத் துறையின் டி.ஐ.ஜி-யாகவும் பணியாற்றினார். அவர் 2017-ல் ஓய்வு பெற்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version