இலங்கை
கெப் வண்டி புரண்டு எட்டுபேர் காயம்
கெப் வண்டி புரண்டு எட்டுபேர் காயம்
கெப் வண்டி புரண்டதில், எட்டு பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக வலப்பனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (20) ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ராகலை, உடுவமதுரவில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த ஒரு குழுவினர் சியம்பலாண்டுவவுக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது, விபத்துக்குள்ளானது.
வலப்பனை, நில்தண்டஹின்ன அம்பன்வெல்ல பகுதியில் அவர்கள் பயணித்த கெப் வண்டி சாலையில் கவிழ்ந்தது
ஓட்டிச் சென்ற கேப் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டார், கேப் வண்டியை நிறுத்த முயன்றபோது, கேப் பிரதான சாலைக்கு அருகிலுள்ள மலையில் மோதியது.
அந்த நேரத்தில், வண்டி மலையில் மோதி பிரதான வீதியின் குறுக்கே கவிழ்ந்ததுள்ளது.