இலங்கை

பிரியங்காவின் கணவர் வசி ஈழத்தமிழரா? பரவலாகப் பேசப்பட்டு வரும் உண்மை

Published

on

பிரியங்காவின் கணவர் வசி ஈழத்தமிழரா? பரவலாகப் பேசப்பட்டு வரும் உண்மை

பிரபல இந்திய விஜே தொலைக்காட்சியில் பெண் தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கும் வசி என்பவருக்கும் இரண்டு தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், பிரியங்காவின் கணவர் வசி இலங்கையைச் சேர்ந்தவர் என்ற தகவல் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.

Advertisement

பிரியங்காவின் கணவர் வசி ஈழத்தமிழராவார்.

இவர் இலங்கை திருகோணமலையை சேர்ந்தவர்.

மேலும், இலங்கை வாழ் தமிழர்களிடையே ஆதரவைப் பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த மறைந்த இரா.சம்பந்தனின் தங்கையின் மகனாவார்.

Advertisement

அதுமட்டுமில்லாது, இலங்கையில் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியும் நடத்தி வந்திருக்கிறார்.

தமிழ்நாட்டிலிருந்து சின்னத்திரை நட்சத்திரங்கள் இலங்கையில் கலைநிகழ்ச்சிகளுக்காகச் சென்று வருவது வழக்கம்.

அப்படிச் சென்று வந்த தருணங்களிலேயே பிரியங்காவுக்கு வசி நண்பராக அறிமுகமாகி, அந்த நட்பே காதலாகி திருமணத்தில் முடிந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

Advertisement

இவர் கடந்த 2016ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவர்களின் திருமணத்திற்கு மாகபா ஆனந்த் சென்றிருந்தார்.

இவர்களின் திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் சந்தோஷமாகத்தான் சென்றுள்ளது.

Advertisement

அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இருவருக்கும் மனஸ்தாபங்கள் ஏற்பட்டதால் இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டே பிரிந்து விட்டார்கள் என கூறப்படுகிறது.

அவர்கள் அதற்கு முன்னர் இருந்தே தனியாக இருந்து வந்துள்ளார்கள்.

அதனால்தான், பிரியங்கா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, ஃபேமிலி வாரத்தில் நடத்தப்படும் ஃப்ரீஸ் டாஸ்க்கின் போது பிரவீன் குமார் கலந்து கொள்ளவில்லை.

Advertisement

பிரியங்காவின் அம்மாவும் தம்பியும் மட்டுமே கலந்து கொண்டனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version