தொழில்நுட்பம்
ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைக்கும் 6 சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் – லிஸ்ட் இங்கே!
ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைக்கும் 6 சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் – லிஸ்ட் இங்கே!
பல முன்னணி நிறுவனங்களின் சிறப்பான 5ஜி ஸ்மார்ட்போன்கள் ரூ.10,000-க்கும் குறைவான விலையில் இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்றன. கேமிரா, பேட்டரி லைஃப், டிஸ்பிளே, பெர்பார்மன்ஸ் என 6 சிறந்த ஸ்மார்ட்போன்களை இங்கே பார்க்கலாம்.1. POCO M6 Pro 5G [ரூ.9,999]புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட பட்ஜெட் செக்மென்ட் 5ஜி போன் POCO M6 Pro, ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 -ல் இந்த மொபைல் இயங்குகிறது. 90Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் 6.79 இன்ச் டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமரா 8MP செல்ஃபி கேமிரா, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் கூடிய 5000mAh பேட்டரி பேக் இந்த மொபைலில் கொடுக்கப்பட்டுள்ளது.2. Redmi A4 5G [ரூ.8,499]ரூ. 8,499 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ள ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் 6.88 இன்ச்-HD+ டிஸ்பிளே, ஸ்னாப் டிராகன் 4எஸ் ஜென் 2 சிப்செட், 50 மெகாபிக்சல் ரியர் கேமரா, 5160mAh பேட்டரி, ஷாவ்மீ நிறுவனத்தின் ஹைப்பர்ஓஎஸ் ஸ்கின் உடனான ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.3. Samsung Galaxy M06 [ரூ.9,587]சாம்சங் கேலக்ஸி எம்.06 போன் 6.7 இன்ச் அளவிலான சிறந்த தெளிவுத்திறன் கொண்ட சூப்பர் AMOLED திரையுடன் வருகிறது. சமீபத்திய ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்துடன் இந்த போன் வெளிவந்துள்ளது. சாம்சங் இந்த போனுக்கு 6 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 6 வருட பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது. நீண்ட நேரம் நீடிக்கும் 5,000 mAh பற்றரியைக் கொண்டுள்ளது. இதனுடன், 45 வாட்ஸ் வேகமான சார்ஜிங் வசதியும் உள்ளது.4. POCO C71 [ரூ.6,499]சக்திவாய்ந்த கேமிங் ஸ்மார்ட் போன்களை தயாரிக்கும் போகோ நிறுவனம் குறைந்த விலையில் சி71 என்ற போனை அறிமுகம் செய்துள்ளது. 6 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜி.பி. மேமரி கொண்ட போனின் விலை ரூ.7,499 ஆகும். ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம், 6.88 அங்குல எச்.டி.பிளஸ் தொடுதிரை, ரெசல்யூசன் 1640*720 பிக்சல், 5200 எம்.ஏ.எச். பேட்டரி, யூனிசாக் பிராசசர், பின்புறம் 32 மெகா பிக்சல், முன்புறம் 8 மெகா பிக்சல் கேமரா போன்ற வசதிகள் உள்ளன.5. Motorola G35 [ரூ.9,999]மோட்டோ ஜி35 5ஜி அம்சங்கள் – 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பிரைட்னஸ், எச்டிஆர் 10, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் 5000mAh பேட்டரி உடன் இந்த மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.6. Oppo A3x [ரூ.8,999]ஒப்போ நிறுவனத்தின் ஓப்போ ஏ3 ப்ரோ 5ஜி (OPPO A3 Pro 5G) ஸ்மார்ட்போன் 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 50எம்பி கேமரா, டைமன்சிட்டி சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. 6.67 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த ஒப்போ போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில 1604 × 720 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.