சினிமா
அஜித் – தனுஷ் சந்திப்பு ஒத்திவைப்பு..! காரணம் என்ன..?அடுத்த பட இயக்குநர் இவர் தான்..
அஜித் – தனுஷ் சந்திப்பு ஒத்திவைப்பு..! காரணம் என்ன..?அடுத்த பட இயக்குநர் இவர் தான்..
பவர்பாண்டி, ராயன் ,நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தினை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் “இட்லி கடை ” விரைவில் படம் வெளியாகவுள்ளதுடன் படத்தின் ஒரு பாடல் மாத்திரம் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக படக்குழு பாங்கொக் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் 12 நாட்கள் அங்கு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதைவிட அஜித் ஏப்ரல் மாதம் கார் ரேஸிங் முடித்து இந்தியா வரும் போது இருவருக்கும் இடையில் சந்திப்பு ஏற்பட்டு புதிய படம் குறித்து பேச்சு வார்த்தைகள் இடம்பெற இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால் தற்பொழுது அஜித் தனுஷுடனான சந்திப்பை ஜூன் மாதமாக தள்ளி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.மேலும் அஜித் அடுத்து ஆதிக் ரவி இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தினை மைத்திரி மூவி மேக்கேர்ஸ் தயாரிப்பதாகவும் உறுதியான செய்தி வெளியாகியுள்ளது.