இலங்கை

அமைச்சர்களின் பெறுமதியான பங்களாக்கள் குறித்து வெளியான அறிவிப்பு

Published

on

அமைச்சர்களின் பெறுமதியான பங்களாக்கள் குறித்து வெளியான அறிவிப்பு

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாகத் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சில பங்களாக்களை சுற்றி அதிகப்படியான காடுகள் வளர்ந்திருப்பதால் பல அமைச்சர் பங்களாக்கள் பாழடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நீண்ட காலமாக பயன்படுத்தப்படாததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், பல அமைச்சர் பங்களாக்கள் பயன்படுத்த முடியாததாகிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு பழுதுபார்க்க வேண்டியிருக்கும் என்றும், புதுப்பிப்பதற்கான நிதியை திரட்டுவது ஒரு பிரச்சினை என்றும் அமைச்சின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நகரில் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட சுமார் ஐம்பது பங்களாக்கள் உள்ளன. புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இந்த பங்களாக்களைப் பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்துள்ளது.

Advertisement

இந்த அமைச்சர் பங்களாக்களை பொருளாதார ரீதியாக உற்பத்தி செய்யும் திட்டங்களுக்குப் பயன்படுத்தவுள்ளதாக  அரசாங்கம்  நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version