இந்தியா
அரசு பணம் ரூ.1.22 லட்சத்தில் ஹோலி விருந்து; இமாச்சல பிரதேச தலைமைச் செயலாளர் செலவு – யார் இந்த பிரபோத் சக்சேனா?
அரசு பணம் ரூ.1.22 லட்சத்தில் ஹோலி விருந்து; இமாச்சல பிரதேச தலைமைச் செயலாளர் செலவு – யார் இந்த பிரபோத் சக்சேனா?
இமாச்சல பிரதேசத்தில் முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இங்கு தலைமைச் செயலராக பிரபோத் சக்சேனா உள்ளார். ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவரின் பதவிக்காலம் கடந்த 31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மேலும் ஆறு மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.ஹோலி பண்டி கையை ஒட்டி, கடந்த மாதம் அரசு அதிகாரிகளுக்கு பிரபோத் சக்சேனா பிரமாண்ட விருந்து அளித்தார். சிம்லாவில், இமாச்சல பிரதேச சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தால் நிர்வகிக்கப்படும், ‘ஹாலிடே ஹோம்’ ஹோட்டலில் இந்த விருந்து கடந்த, மார்ச் 14ம் தேதி நடந்தது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கதலைமைச் செயலரால் தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்ட இந்த விருந்துக்கு, 1.22 லட்சம் ரூபாய் செலவானது. இதற்கான, ‘பில்’ தயாரிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன் அரசு கணக்கு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்ட விருந்து என்பதால், பில்லுக்கான பணம் இன்னும் செலுத்தப்படாமல் உள்ளது.இந்நிலையில், அந்த விருந்துக்கான ரசீது, சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் வெளியானது. இந்த விருந்தில் 1,000 ரூபாய் மதிப்பிலான ஒரு பிளேட், மதிய உணவு, 75 பேருக்கு வழங்கப்பட்டதாகவும், அரசு அதிகாரிகளின் ஓட்டுநர்கள் 22 பேருக்கு, 585 ரூபாய் மதிப்பில் உணவு வழங்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜி.எஸ்.டி., வரி உட்பட 1.22 லட்சம் ரூபாய்க்கான அந்த பில்லை, அரசுக்கு தலைமைச் செயலர் அனுப்பி வைத்தது சர்ச்சையை எழுப்பியுள்ளது.இமாச்சல பிரதேச அரசு கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் சூழலில், இந்நிகழ்வுக்கு பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான பிக்ரம் சிங் கூறுகையில், “அரசுக்கு, 1 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இந்த நேரத்தில் இந்த ஊதாரித்தனமான செலவு தேவையா? அரசு அதிகாரிகளின் இதுபோன்ற நடத்தை, அப்பட்டமான விதிமீறல். பொதுமக்களின் பிரச்னைகளில் அக்கறை காட்டாமல் அரசு அலட்சியமாக செயல்படுவதை இந்த நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது,” என்றார்.எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்த அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுக், பிரபோத் சக்சேனா தனிப்பட்டதாக கருதி பில்லை செலுத்த வேண்டும் என்று கூறினார். “கட்சியை தனிப்பட்ட முறையில் கருதி, கட்டணத்தை தானே செலுத்துமாறு தலைமைச் செயலாளருக்கு நான் பரிந்துரைத்திருப்பேன் … எனது தனிப்பட்ட கருத்துப்படி, இதுபோன்ற விஷயங்களை நாம் தவிர்க்க வேண்டும்” என்று சுகுவின் ஊடக ஆலோசகர் நரேஷ் சவுத்ரி கூறினார்.சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்கூர், சக்சேனாவுக்கு ஏன் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது என்றும், அதிகாரத்துவத்தில் உள்ள மற்றவர்களுக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.1990 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சக்சேனா உத்தரப் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்தவர். டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். சிவில் சேவைகளில் சேருவதற்கு முன்பு, லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிடிகல் சயின்ஸில் பட்டம் பெற்றார். 2008 முதல் 2013 வரை மத்திய நிதி அமைச்சகத்தில் பணியாற்றினார்.