இலங்கை
ஈஸ்டர் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு பணம் வழங்கிய ஜே.வி.பி ; வெளிப்படுத்திய FBI
ஈஸ்டர் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு பணம் வழங்கிய ஜே.வி.பி ; வெளிப்படுத்திய FBI
ஜே.வி.பியின் தேசியப் பட்டியலில் இருந்த இப்ராஹிம் என்பவரே ஏப்ரல் 21 தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளுக்குப் பணம் மற்றும் அதிகாரம் என்பவற்றை வழங்கியுள்ளதாக அமெரிக்காவின் எஃப்.பி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அடையாளம் காண்பதற்கே தற்போதைய அரசாங்கம் ஆட்சியமைத்தது.
அதற்கமைய ஏப்ரல் 21ஆம் திகதிக்குள் பிரதான சூத்திரதாரி வெளிப்படுத்தப்படுவார் என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
எனவே, அந்த பெயரை ஜனாதிபதி வெளியிடுவார் என எதிர்பார்ப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜே.வி.பியின் தேசியப் பட்டியலில் இருந்த இப்ராஹிம் என்பவரே பயங்கரவாதிகளுக்குப் பணம் மற்றும் அதிகாரத்தை வழங்கியுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது.
இந்த விடயம் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறாயின் இதற்கு ஜே.வி.பியே பொறுப்புக் கூற வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.