இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் ; மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நினைவேந்தல்

Published

on

ஈஸ்டர் தாக்குதல் ; மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நினைவேந்தல்

  கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு அன்று நடைப்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 6 ம் ஆண்டு நினைவேந்தல் நினைவேந்தப்பட்டது.

இன்று (21) தேவாலயத்தின் முன்னால் உயிரிழந்தவர்களின் உறவுகள் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் மெழுகுவர்த்தி ஏற்றி மலர் வைத்து மௌன அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

இதில் அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சியின் தலைவர் சிவதர்சன் தலைமையில் ஏற்பாட்டினை அடுத்து குண்டுவெடிப்பில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்து பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் கட்சியின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தேவாலயத்தின் முன்பகுதியில் உயிரிழந்தவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி நிமிட அஞ்சலி மௌன செலுத்தினர்.

இந்த நினைவேந்தலையிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு கடமையில் பொலிஸார் விமானப்படையினர் ஈடுபட்டனர்.

Advertisement

ஈஸ்டர் தின தற்கொலை குண்டு தாக்குதலில்14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 80 பேர் படுகாயமடைந்து குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version