சினிமா

என் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்.. கோபத்துடன் நடிகை பவித்ரா லட்சுமி

Published

on

என் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்.. கோபத்துடன் நடிகை பவித்ரா லட்சுமி

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை பவித்ரா லட்சுமி. இவர் சதீஸ் ஹீரோவாக நடித்த நாய் சேகர் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் இவர், பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் என்றும், அதனால் ஏற்பட்ட உடல் அலர்ஜியால் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் சோசியல் மீடியாவில் தகவல் பரவி வருகிறது.இந்த நிலையில், இதற்கு விளக்கம் அளித்து கோபத்துடன் பேசியுள்ளார் நடிகை பவித்ரா லட்சுமி.அவர் கூறியதாவது, “நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறேன் என்பது உண்மை இல்லை. அதே போல் நான் உடல் நலம் பாதிக்கப்பட்டு எந்த சிகிச்சையும் பெறவில்லை. சமூக ஊடகங்களில் இதுபோன்ற வந்தந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். உங்களுடைய பொழுது போக்கிற்காக என் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம். எனக்கு ஒரு எதிர்காலம் உள்ளது. இதுபோன்ற வந்தந்திகளை பரப்பி அதை நீங்கள் கடினமாக்க வேண்டாம்” என கேட்டு கொண்டுள்ளார் பவித்ரா லட்சுமி.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version