விளையாட்டு

ஐபிஎல் 2025; 6-வது தோல்வியை சந்தித்த சி.எஸ்.கே: ப்ளேஅஃப் வாய்ப்பு எப்படி?

Published

on

ஐபிஎல் 2025; 6-வது தோல்வியை சந்தித்த சி.எஸ்.கே: ப்ளேஅஃப் வாய்ப்பு எப்படி?

18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால், அணியின் பிளேஆஃப் குறித்த நம்பிக்கைகள் தொய்வடைந்துள்ளன.ஆங்கிலத்தில் படிக்க: IPL 2025: CSK Playoffs qualification scenario after loss to Mumbai Indians; remaining match schedule, points table18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் தலா 7 ஆட்டங்களை முடித்து, 2-வது சுற்று ஆட்டத்தை தொடங்கியுள்ளனர். இதில் ருத்துராஜ் கெய்க்வாட்  தலைமையில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல் 7 போட்டிகளில் 5 தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. இதில் 5 போட்டிகளில் விளையாடிய ருத்துராஜ் கெய்க்வாட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார்.இதனையடுத்து முன்னாள் கேப்டன் தோனியின் தலைமையில் தற்போது விளையாடி வரும் சென்னை அணி, நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணியுடன் மோதியது. இதில் முதலில் பேட் சென்னை சென்னை அணி 176 ரன்கள் குறித்தது. ஷிவம் டூபே, ஜடேஜா ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து 177 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 16 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.இதன் மூலம் சென்னை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்விசை சந்தித்த நிலையில், இந்தத் தோல்வியின் மூலம், தோனி தலைமையிலான சென்னை அணி 8 போட்டிகளில் விளையாடி 6-வது தோல்வியை சந்தித்துள்ளது. இந்த சூழ்நிலையில் இருந்து அணி ஒரு நேரத்தில் ஒரு ஆட்டத்தை எடுத்துக்கொண்டு தங்கள் நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று தோனி கூறியிருந்தாலும், பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை சென்னை அணி இன்னும் இழந்துவிடவில்லை.ஐபிஎல் 2025 பிளேஆஃப் தகுதிச் சுற்று8 போட்டிகளில் விளையாடி 4 புள்ளிகளுடன், சிஎஸ்கே தற்போது புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதில் 4-வது இடத்தில் உள்ள பஞ்சாப் கிங்ஸை விட ஆறு புள்ளிகள் பின்தங்கியுள்ளது. கணித வாய்ப்புகள் குறைவாகவே இருந்தாலும், மீதமுள்ள ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்று, வேறு சில முடிவுகளும் கிடைத்தால், சிஎஸ்கே பிளேஆஃப்களில் கடைசி 4 இடங்களுக்குள் நுழைய முடியும்.இதுவரை இரண்டு தொடர்ச்சியான ஐபிஎல் சீசன்களில் சிஎஸ்கே போட்டியிட்டபோது இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாமல் போனதில்லை. கடந்த சீசனில் 14 புள்ளிகளுடன் மட்டுமே பிளேஆஃப்களுக்கு முன்னேறிய பரம எதிரியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சிஎஸ்கே அணி உத்வேகமாகக் கொள்ளலாம். 2024 ஆம் ஆண்டு நடந்த கடைசி லீக் போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று, சிறந்த நிகர ரன் ரேட் மூலம் சிஎஸ்கே அணியை வீழ்த்தி ப்ளேஅஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. 2022 ஆம் ஆண்டு லீக்கில் 10 அணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததிலிருந்து, ஒரு அணி 14 புள்ளிகளுடன் பிளேஆஃப்களுக்கு தகுதி பெற்ற முதல் நிகழ்வாக இது அமைந்தது.இருப்பினும், சிஎஸ்கே அணி அடுத்து வரும் 6 ஆட்டங்களில் வெற்றி பெறுவதோடு, ரன்ரேட் அடிப்படையில் முன்னணியிலும் சிறப்பாகச் செயல்பட வேண்டும். இந்த சீசனில் சென்னையின் -1.392 என்ற நெட் ரன்ரேட்டை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.சென்னை அணியின் மீதமுள்ள போட்டி அட்டவணைஏப்ரல் 25: CSK vs SRH, சென்னை,  ஏப்ரல் 30: CSK vs PBKS, சென்னை, மே 3: RCB vs CSK, பெங்களூரு, மே 7: KKR vs CSK, கொல்கத்தா, மே 12: CSK vs RR, ஜெய்ப்பூர், மே 18: GT vs CSK, அகமதாபாத்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version