பொழுதுபோக்கு
ஒரே ஃபிரேமில் 2 ஸ்டார்ஸ்: சின்னத்திரை நடிகைகள் ஜாலி க்ளிக்ஸ் வைரல்
ஒரே ஃபிரேமில் 2 ஸ்டார்ஸ்: சின்னத்திரை நடிகைகள் ஜாலி க்ளிக்ஸ் வைரல்
ஜீ தமிழின் செம்பருத்தி சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தவர் நடிகை ஷபானா. 5 வருடங்கள் ஒளிபரப்பான இந்த சீரியல், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது,2022-ம் ஆண்டு செம்பருத்தி சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, சன்டிவியின் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் ஷபானா நாயகியாக நடித்து வந்தார்.ஒரு வருடம் மட்டுமே ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி சீரியல் 2024-ம் ஆண்டு முடிவுக்கு வந்த நிலையில், அதன்பிறகு ஷபானா வேறு எந்த சீரியலிலும் நடிக்கவில்லை.சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஷபானா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பிரபல நடிகையுடன் இணைந்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய மாப்பிள்ளை சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்தார். ஜனனி முதலில் அறிமுகமானது என்னவோ சினிமாவில் தான். நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ’நண்பேன்டா’ படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார்.அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான’நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் சரண்யா என்கிற ரோலில் நடித்தார். இந்த சீரியலும் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. ஜீ தமிழின் இதயம் சீரியலில் 5 வயது குழந்தைக்கு அம்மா கேரக்டரில் நடித்து வந்தார்.சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நடிகை ஷபானாவுடன் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.