இலங்கை

கனடா இந்து கோவில்களை சேதப்படுத்திய காலிஸ்தான் தீவிரவாதிகள்

Published

on

கனடா இந்து கோவில்களை சேதப்படுத்திய காலிஸ்தான் தீவிரவாதிகள்

  கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள குருத்வாராவை கோவில் மீது நேற்று (20) காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் , மற்றுமொரு இந்து கோவிலான லட்சுமி நாராயணன் கோவிலையும் காலிஸ்தான் சேதப்படுத்தியுள்ளனர்.

காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோவிலின் சுவர்களை சேதப்படுத்தியுள்ளதோடு அச் சுவர்களில் மையில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களையும் எழுதி வைத்துள்ளனர்.

Advertisement

சம்பவம் குறித்து கனடாவில் உள்ள இந்து அமைப்பு அறிக்கையில்,

காலிஸ்தான் தீவிரவாதிகளால் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள லட்சுமி நாராயண் கோவிலில் நடந்த நாசவேலையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்து வெறுப்பு என்ற இந்த செயலுக்கு கனடாவில் இடமில்லை. விரைவான நடவடிக்கையை நாங்கள் வலியுறுத்துகிறோம். மேலும் வெறுப்புக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றுபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கனடா எம்.பி., சந்திரா ஆர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisement

பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள் இன்றும் குறையாமல் தொடர்கின்றன. இந்த செயல் கண்டிக்கத்தக்கது.

பயத்தையும், பிரிவினையையும் தீவிரவாத சக்திகள் ஏற்படுத்த அதிகாரிகளிடமிருந்து முயற்சிக்கிறது. உடனடி நடவடிக்கையை கோர வேண்டிய நேரம் இது. மௌனமாக இருப்பதால் இனி ஒரு பயனும் கிடையாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version