தொழில்நுட்பம்

கோடையில் வெயிலில் இளைப்பாற… பட்ஜெட் விலையில் கிடைக்கும் பிராண்டட் ஏ.சி.கள்!

Published

on

கோடையில் வெயிலில் இளைப்பாற… பட்ஜெட் விலையில் கிடைக்கும் பிராண்டட் ஏ.சி.கள்!

நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பல மாநிலங்களில் 40 டிகிரிக்கு மேல் எட்டியுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு வெயிலின் அதிகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அனல் பறக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுப்பட பலர் ஏர் கண்டிஷனர் (ஏசி) பயன்படுத்த தொடங்கிவிட்டனர். மேலும் வெப்பநிலை காரணமாக தற்போது ஏசியின் தேவை அதிகரித்துள்ளது. அந்தவகையில் தற்போது நீங்கள் பட்ஜெட் விலையில், மின்சார சேமிப்புடன் புதிய ஏசி வாங்க விரும்பினால், இங்கு பல பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படும் டாப் ஏசியை பற்றி காணப்போகிறோம். 1.Blue Star 0.8 Ton 3 Star Inverter Split ACரூ.30,000க்கு கீழ் விற்பனையாகும் ஏசிக்களில் Blue Star 0.8 Ton 3 Star Inverter Split AC சிறந்த தேர்வாக இருக்கும். சிறிய அளவிலான அறைகளுக்கு இது உகந்தது. இந்த ஏசியை செயலி அல்லது வாய்ஸ் கமாண்ட் மூலமாக இயக்க முடியும் என்பது தனிச்சிறப்பு. இதற்கு ஸ்டெபலைசர் தேவைப்படாது. 3 ஸ்டார் ரேட்டிங் கொண்ட இந்த ஏசியின் கம்ப்பிரசருக்கு 10 ஆண்டுகள் வாரண்டி கிடைக்கிறது. டர்போ கூல் மற்றும் மின்சாரத்தை சேமிக்கும் திறன் கொண்டது. இதன் விலை ரூ.29,490 ஆகும். இன்வெர்ட்டர் தொழில்நுட்பம் மின் பயன்பாட்டைக் குறைக்கிறது. நட்சத்திர மதிப்பீடு காரணமாக இது ஆற்றல் திறனின் நல்ல சமநிலையை அளிக்கிறது.2.Daikin 0.8 Ton 3 Star Split AC0.8டன் கூலிங் கெபாசிட்டி கொண்டதால் இது சிறிய அறைக்கு மட்டுமே பொருந்தும். அதிக வெப்பம் நிலவும் போது விரைவாக அறையின் வெப்பத்தை குறைக்கும் திறன் கொண்டது. காப்பர் கண்டெண்டர் காயில் இருப்பதால் , மெயிண்டனென்ஸ் அதிகம் தேவைப்படாது என சொல்லப்படுகிறது. மின்சாரத்தை மிச்சப்படுத்தும் திறன் கொண்டது. மொத்தமாக ஒரு வருட வாரண்டி மற்றும் 5 ஆண்டுகள் கம்பிரசர் வாரண்டியுடன் கிடைக்கும் இந்த ஏசி 3 ஸ்டார் ரேட்டிங்கொண்டது. இன்வெர்டர் மாடல்களுடன் ஒப்பிடுகையில் குறைவான வசதிகள் கொண்டது. இதன் விலை ரூ.27,290 ஆகும்.3.Lloyd 1.0 Ton 3 Star Inverter Split ACரூ.28,990க்கு கிடைக்கும் இந்த ஏசி 3 ஸ்டார் ரேட்டிங் கொண்டது. கூலிங் திறனை 30% முதல் 110% வரை தானாகவே சரிப்படுத்தி கொள்ளும் திறன் கொண்டது. மீடியம் சைஸ் அறைகளுக்கு பொருந்தக் கூடியது. சுத்தமான காற்றை உறுதி செய்யும் பிஎம் 2.5 ஃபில்டர் கொண்டது. இதற்கு ஸ்டெபலைசர் தேவையில்லை மற்றும் டர்போ கூலிங், லோ கேஸ் டிடெக்சன் வசதி கொண்டது. மொத்தமாக ஓராண்டு வாரண்டியும், கம்பிரசருக்கு 10 ஆண்டுகள் வாரண்டியும் கிடைக்கும்.4.Godrej 1 Ton 3 Star Split ACரூ.27,990க்கு கிடைக்கும் இந்த ஏசி 1 டன் கெபாசிட்டி கொண்டது என்பதால் மீடியம் சைஸ் அறைகளுக்கும் பயன்படுத்தலாம். மின்சாரத்தை மிச்சப்படுத்துவதோடு 52 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் திறம்பட செயல்படும் என சொல்லப்படுகிறது.காப்பர் கண்டென்சர் கொண்டிருப்பதால் பெரிய மெயிண்டனென்ஸ் தேவைப்படாது மற்றும் நீண்ட நாள் உழைக்க கூடியது. ஐ-சென்ஸ் எனப்படும் நவீன தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இதற்கு மொத்தமாக 1 ஆண்டு வாரண்டியும், கம்பிரசருக்கு 10 ஆண்டுகள் வாரண்டியும் கிடைக்கும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version