இலங்கை

திருமண நிச்சயதார்த்தம் முடிந்த சில மணி நேரத்தில் மணமகனின் விபரீத முடிவு; துயரத்தில் உறவுகள்

Published

on

திருமண நிச்சயதார்த்தம் முடிந்த சில மணி நேரத்தில் மணமகனின் விபரீத முடிவு; துயரத்தில் உறவுகள்

 திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் சில மணி நேரத்தில் , மணப்பெண் மிரட்டியதால் 36 வயது மணமகன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்திய மாநிலம் குஜராத்தில் இடம்பெற்ற இசமபவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

Advertisement

குஜராத் மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த வருமான வரித்துறை பணியாளர் ஹரிராம் சத்யபிரகாஷ் பாண்டே (36).

நாசிக்கில் பணிபுரிந்து வந்த இவருக்கும், மோஹினி என்ற பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அப்போது மோஹினி தனது காதலர் சுரேஷுடன் நெருக்கமாக இருந்ததை கண்டு ஹரி ராம் அதிர்ச்சியடைந்துள்ளார்.

Advertisement

இதனையடுத்து அந்நபருடன் காதலை முறித்துக் கொண்டால் மட்டுமே திருமணம் செய்துகொள்வேன், இல்லையென்றால் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என ஹரிராம் மோஹினியிடம் கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, என்னை திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால், உன் மீதும் உன் குடும்பத்தின் மீதும் வரதட்சணை புகார் அளிப்பேன் என மோஹினி மிரட்டியுள்ளார்.

இதனைக் கேட்டு ஹரி ராம் அதிர்ச்சியடைந்து மன உளைச்சல் அடைந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இந்த நிலையில், ஹரி ராம் வீட்டில் யாரும் சமயத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். தகவல் அறிந்த பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version