இலங்கை

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்!

Published

on

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடலொன்று இன்று (21) இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.எல்.ஏ.ரத்நாயக்க தெரிவித்தார்.

இன்று (21) முற்பகல் மேற்படி கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Advertisement

 அதற்கமைய, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் செயலாளர்களும் இன்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைமுறைகள் தொடர்பிலும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது குறித்து தெரிவிக்கவே அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்தார்.

 சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத்திற்காக பிரதிநிதிகள் தெரிவு, தேர்தல் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது என்பது குறித்தும் இதன்போது விளக்கமளிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Advertisement

இதேவேளை, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் இன்று தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 தேர்தல் கண்காணிப்பு பணிகள் மற்றும் எதிர்கால திட்டமிடல்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடலை மேற்கொள்வதற்காக இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதற்கிடையே, 112 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்காளர் அட்டைகள் அடங்கிய பொதிகள் இன்று தபால் நிலையத்திற்கு வழங்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

 சம்பந்தப்பட்ட மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளின் ஊடாக இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.எல்.ஏ.ரத்நாயக்க தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ VIDEO)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version