சினிமா

நடிகை சமந்தாவின் விவகாரத்திற்கு காரணம் இது தான்..!

Published

on

நடிகை சமந்தாவின் விவகாரத்திற்கு காரணம் இது தான்..!

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கடந்த சில ஆண்டுகளில் பெரிதும் படங்களில் நடிக்கவில்லை. இருப்பினும் இவர் இன்னும் ரசிகர்களால் உச்ச நட்சத்திரமாக கவனிக்கப்படுகிறார். சமந்தாவின் சமீபத்திய செயல் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நடிகை சமந்தா “சக்சஸ்வெர்ஸ்” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோவை லைக் செய்திருக்கிறார். இந்த வீடியோ ‘டைரி ஆஃப் எ சிஇஒ’ என்ற யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு பகுதியின் வடிவமைப்பாகும். அந்த வீடியோவில் ஆண்கள் தங்கள் நோய்வாய்ப்பட்ட மனைவிகளை ஏன் விட்டு செல்வார்கள் என்பது குறித்து பேசப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரம் “624% சதவீதத்திற்கும் அதிகமான ஆண்கள் தங்கள் நோய்வாய்ப்பட்ட மனைவிகளை விட்டு பிரிந்து சென்றுவிடுகிறார்கள். ஆனால் பெண்கள் பெரும்பாலும் தங்கள் நோய்வாய்ப்பட்ட கணவனை நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள்” எனக் கூறப்படுகிறது.இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 60 ஆயிரம் லைக்குகளை பெற்று வைரலாகி உள்ளது. மேலும் சமந்தா தன் சமூக ஊடக பக்கத்தில் இந்த வீடியோகை லைக் செய்துள்ளார். எனினும் அவர் வீடியோ தொடர்பாக வேறு எந்த கருத்தையும் பகிர்ந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version