தொழில்நுட்பம்
பட்ஜெட் விலையில் மோட்டோரோலா இறக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்… டிஸ்பிளே, சார்ஜிங், மாடல் செக் பண்ணுங்க!
பட்ஜெட் விலையில் மோட்டோரோலா இறக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்… டிஸ்பிளே, சார்ஜிங், மாடல் செக் பண்ணுங்க!
மோட்டோரோலா நிறுவனம் தனது எட்ஜ் 60 தொடரின் 2வது ஸ்மார்ட்போனான மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் (Motorola Edge 60 Stylus) போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. மோட்டோரோலா எட்ஜ் 60 போனின் படங்கள் மற்றும் முக்கிய விவரக் குறிப்புகள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸை ஏப்ரல் 23 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட், மோட்டோரோலாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஆஃப்லைன் சில்லறை விற்பனைக் கடைகளில் வாங்கலாம். இந்த போன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வகைகளில் ₹22,999 விலையில் கிடைக்கும். நீங்கள் வங்கி சலுகை மற்றும் பரிமாற்ற சலுகையைப் பயன்படுத்திக் கொண்டால், அதை ₹ 21,999 என்ற விலையில் வாங்கலாம். இந்த தொலைபேசி Surf the Web மற்றும் Gibraltar Sea ஆகிய 2 அழகான Pantone சரிபார்க்கப்பட்ட வண்ண விருப்பங்களில் வருகிறது.மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்மார்ட்போனின் பின்புறம் 3 கேமராக்கள் உள்ளன. pOLED டிஸ்பிளே உடன் இந்த புதிய மோட்டோரோலா போன் அறிமுகம் செய்யப்படும். 6.7-இன்ச் கர்வ்ட் பிஒஎல்இடி டிஸ்பிளே (pOLED display) வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 போன் அறிமுகமாகும். மேலும் 1.5K ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (in display fingerprint scanner) பல அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன.மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எஸ்ஒசி (MediaTek Dimensity 7300 SoC) சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்மாரட்போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்மார்ட்போன் வெளிவரும். மோட்டோரோலா எட்ஜ் 60 போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போன் மிலிட்டரி கிரேட் உறுதியுடன் (miltary-grade durability) MIL-810H சான்று பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த போனின் பாதுகாப்பு வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி எல்ஒய்டிஐஏ 700சி (Sony LYTIA 700C) மெயின் கேமரா + அல்ட்ரா வைடு கேமரா + டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்.இ.டி. பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக மேம்பட்ட AI அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான இந்த மோட்டோரோலா போன்.5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 68W வயர்டு சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். இது டால்பி அட்மாஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் ஸ்டைலஸ் ஆதரவையும் கொண்டுள்ளது, எனவே நீங்கள் வரைதல், ஓவியம் வரைதல் மற்றும் விரைவான குறிப்புகளை எடுப்பது போன்றவற்றைச் செய்யலாம். 5G, 4G, Wi-Fi 6E, ப்ளூடூத் 5.4, GPS, GLONASS, NFC மற்றும் USB டைப்-C போர்ட் ஆகிய கனெக்டிவிட்டிக்கான அம்சங்களும் இந்த போனில் உள்ளன.