இலங்கை

பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸ் காலமானார்; வத்திக்கான் அறிக்கை

Published

on

பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸ் காலமானார்; வத்திக்கான் அறிக்கை

உலக கத்தோலிக்க  திருச்சபையின் தலைவர், பரிசுத்த  பாப்பரசர்   போப் பிரான்சிஸ் காலமானதாக வத்திக்கான் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 பரிசுத்த போப் பிரான்சிஸ் திங்கள்கிழமை காலை காலமானார் என்று வத்திக்கான் கேமர்லெங்கோ கார்டினல் கெவின் ஃபெரெல் அறிவித்தார்.  இன்று காலை 7:35 மணிக்கு, ரோம் பிஷப் பிரான்சிஸ், தந்தையின் வீட்டிற்குத் திரும்பினார்.

Advertisement

அவரது முழு வாழ்க்கையும் கர்த்தருக்கும் அவருடைய திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது  என ஃபாரெல் அறிவிப்பில் கூறினார்.

அண்மையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போப், தனது 88 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.

சுவாசக் கோளாறு காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பாப்பரசர் பிரான்சிஸ், அதன் பின்னர் குணமடைந்து இல்லம் திரும்பியிருந்தார்.

Advertisement

நேற்று (20) வத்திக்கானில் உள்ள புனித பீட்டர்ஸ் பெசிலிக்காவில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு ஆராதனையிலும் அவர் பங்கேற்றிருந்ந்தார்.

போர் பிரான்சிஸ் மறைவுக்கு உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் போப்பின் மறைவு உலக வாழ் கத்தோலிக்க மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version