இந்தியா

பாண்லே பால் பொருட்கள் விலை உயர்வு அமல்: அதிர்ச்சியில் புதுச்சேரி மக்கள்

Published

on

பாண்லே பால் பொருட்கள் விலை உயர்வு அமல்: அதிர்ச்சியில் புதுச்சேரி மக்கள்

புதுச்சேரி அரசின் பாண்லே நிறுவனத்தின் ஐஸ்கிரீம்,‌ குல்பி உள்ளிட்ட பால் பொருட்களின் விலை குறைந்தபட்சம் ரூ.1 முதல் அதிகபட்சம் ரூ. 70 வரை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி அரசின் சார்பு நிறுவனமான பாண்லே மூலம் பால், தயிர், நெய், பன்னீர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்கள் புதுச்சேரி முழுதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சுவை, தரம் காரணமாக இந்த பொருட்களுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் பாண்லே ஐஸ்கிரீம், குல்பி பொருட்களில் விலை இன்று முதல் உயர்த்தப்படுவதாக பாண்லே நிர்வாகம் அறிவித்துள்ளது.அதன்படி குறைந்தபட்சம் ரூ.1 முதல் அதிகபட்சம் ரூ. 70 வரை உயர்த்தப்படுகிறது.குறிப்பாக ரூ. 7-க்கு விற்கப்பட்ட‌‌ வெண்ணிலா ஐஸ்கிரீம் ரூ.8-கவும், ரூ.35-க்கு விற்கப்பட்ட குல்பி ரூ.40-கவும், பட்டர் ஸ்காட்ஸ் 90 எம்எல் ரூ. 25-ல் இருந்து ரூ. 30- ஆகவும், 500 எம்எல் வென்னிலா ஐஸ்கிரீம் ரூ.100-ல் இருந்து ரூ.120-ல் ஆகவும்‌, 1 லிட்டர் பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் ரூ. 180-ல் இருந்து ரூ. 250 என அதிகபட்சமாக ரூபாய் 70 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது‌.இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக பாண்லே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version