இலங்கை

புத்தாண்டு காலத்தில் பல மில்லியன் வருமானம் பெற்ற அதிவேக நெடுஞ்சாலை

Published

on

புத்தாண்டு காலத்தில் பல மில்லியன் வருமானம் பெற்ற அதிவேக நெடுஞ்சாலை

தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக 462 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 09 முதல் மற்றும் 19ஆம் திகதி வரையான 10 நாட்களில் மாத்திரம் மேற்படி வருமானம் ஈட்டப்பட்டதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர்  தெரிவித்துள்ளார்.

Advertisement

குறித்த காலப்பகுதியில் 1.3 மில்லியன் வாகனங்கள் பயணித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளதன் படி இம்முறை தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்ட கடந்த 10ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையான 10 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலையில் 1.3 மில்லியன் வாகனங்கள் பயணித்துள்ளன.

அதன் ஊடாக 462 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது. இன்றும் பெருமளவான வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பயணிக்கும் என எதிர்பார்க்கிறோம். அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைவதற்கு முன்னதாக வாகனத்தை சோதித்து, டயர் நிலைமைகள் மற்றும் வாகன சமிக்ஞை விளக்குகளின் செயற்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisement

அதேபோல அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது முன்னால் செல்லும் வாகனத்துடன் 50 மீற்றர் இடைவௌியில் பயணிக்குமாறும் இருக்கைப் பட்டையை (சீட் பெல்ட்) முறையாக அணிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், நிலவும் மழையுடனான வானிலை காரணமாக வாகனத்தை கட்டுப்படுத்தும் வகையிலான வேகத்தில் பயணிக்குமாறும் அத்தோடு உங்களது வாகனத்தில் ஏதேனும் கோளாறு ஏற்படுமானால் எமது அவசர தொலைபேசி இலக்கமான 1969 என்ற எண்ணுக்கு அழைக்குமாறும், இந்த தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் செயற்பாட்டில் இருக்கும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version