பொழுதுபோக்கு
மகன் உடல்நிலை குறித்து அவதூறு; நெல்லை எஸ்.பி.யிடம் நெப்போலியன் புகார்
மகன் உடல்நிலை குறித்து அவதூறு; நெல்லை எஸ்.பி.யிடம் நெப்போலியன் புகார்
இயக்குனர் சிகரம் பாரதி ராஜாவால், தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் செய்யப்பட்டவர் நெப்போலியன். இவர் நாயகனாக நடித்த, ‘புது நெல்லு புது நாத்து’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதைத் தொடர்ந்து இவர் ஹீரோவாக மட்டும் நடிக்காமல், வில்லன், குணச்சித்திர நடிகர், என சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.குறிப்பாக இவர் நடித்த எட்டுப்பட்டி ராசா, சீவலப்பேரி பாண்டி, போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். சினிமாவில் முன்னணி வேடத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே அதிரடியாக தன்னுடைய மாமா மூலம் திமுக கட்சியில் இணைந்த நெப்போலியன், வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, சட்டமன்ற உறுப்பினராக மாறினார். இதை தொடர்ந்து திமுக கட்சி சார்பில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்பி-யாக மாறினார். மத்திய இணை அமைச்சராகவும் இருந்த நெப்போலியன், தன்னுடைய குடும்பம் மற்றும் குழந்தைகளுக்காக முழுவதுமாக அரசியலில் இருந்து விலகி அமெரிக்காவுக்கு சென்றார்.நெப்போலியன் மகன் தனுஷுக்கு சிறுவயதிலிருந்தே, தசை சிதைவு நோய் இருந்தது. 3 வயதில் இந்த பிரச்சனை கண்டறியப்பட்ட நிலையில், 10 வயதில் முழுவதுமாக நடக்க முடியாமல் போனது. ஆயுர் வேத சிகிச்சை முறையில், ஓரளவு கட்டுக்குள் வந்த போதும் மேல் சிகிச்சைக்காக குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆனார் நெப்போலியன்.இந்நிலையில் தன்னுடைய மகன் தனுஷ் திருமண வயதை எட்டியதும், தன்னுடைய கடமையை பூர்த்தி செய்யும் விதமாக மகனுக்கு பல இடங்களில் பெண் தேடி வந்தார். மகனை திருமணம் செய்து கொள்ளும் பெண் தமிழ் பெண்ணாக தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த நிலையில், திருநெல்வேலியை சேர்ந்த உறவினர் பெண்ணான அக்ஷயா என்பவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி தனுஷ் – அக்ஷயா திருமண நிச்சயதார்த்தம் முடிந்த சில மாதங்களையே இவர்களுடைய திருமணம், ஜப்பானில் தமிழ் கலாச்சாரத்தின் படி வெகு விமர்சியாக நடந்து முடித்துள்ளது.இவங்களுடைய திருமண நிச்சயமான சமயத்திலேயே சிலர் நெப்போலியன் மகனால இல்லற வாழ்க்கையில ஈடுபட முடியாது. அவருக்கு எந்த நேரத்துல எது வேணாலும் நடக்கலாம், பணத்தை காட்டி ஒரு பொண்ணோட வாழ்க்கையை நெப்போலியன் வீணாக்கிட்டாரு. அந்தப் பெண், தனுஷ்க்கு நர்ஸாதான் இருக்க முடியும் மனைவியா இருக்க முடியாது அப்படின்னு எல்லாம் சில மூத்த பத்திரிக்கையாளர்கள் விமர்சனம் செய்தனர். மறுபடியும் தனுஷுடைய உடல்நிலை பற்றியும் திருமணம் பற்றியும் சிலர் தவறாக பேசுவதால், தனுஷுக்கு சிகிச்சையளிக்கும் இயன்முறை மருத்துவர் டேனியல் ராஜா, நெப்போலியன் சார்பில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளார். நெப்போலியன் மகன் தனுஷ் உடல்நிலை குறித்தும், அவரது மனைவி அக்ஷயா குறித்தும் யூடியூப் சேன்ல்களில் அவதூறு பரப்பப்படுவதாக அந்த புகாரில் கூறியுள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் இதுபோன்று அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார். மகன் தனுஷ் மற்றும் அவரது மனைவி அக்க்ஷயா இருவரும் நல்ல உடல்நலத்துடன் சேர்ந்து வாழ்கிறார்கள் என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.