இலங்கை

வடக்கில் சிங்கள மேலாதிக்கத்திற்கு இடம்கொடுக்க கூடாது ; சிவஞானம் வலியுறுத்து

Published

on

வடக்கில் சிங்கள மேலாதிக்கத்திற்கு இடம்கொடுக்க கூடாது ; சிவஞானம் வலியுறுத்து

வடக்கில் காலூன்ற நினைக்கும் தேசிய மக்கள் சக்தியின் சிங்கள மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும் அரசியல் ரீதியில் இடம்கொடுக்க கூடாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் உள்ளூராட்சி மன்ற தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில் 6 ஆம் திகதி தேர்தலும் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கின்றோம்.

Advertisement

ஒவ்வொரு உள்ளூராட்சியும் அந்தந்த பிரதேசங்களைக் கொண்ட பிரதிநிதிகளை குதிப்பாக தமிழர் பூர்வீக கட்சிகளை கொண்ட பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது அவசியம்.

இந்நேரம் தமிழரசுக் கட்சி இம்முறை வடக்கு – கிழக்கில் 58 சபைகளைல் போட்டியிடுகின்றது. அந்த சபைகளுக்கு நாம் சிறப்பான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம்.

இந்நிலையில், ஊழல் இல்லாத சபைகளுக்கே நிதி என ஜனாதிபதி கூறுவதை ஏற்க முடியாது.

Advertisement

கடந்த காலத்தில் வடக்கு மாகாண சபைக்கு அனுப்பப்பட நிதியில் எந்த நிதி திருப்பி அனுப்பப்படது என்பதை எவரவது நிரூபியுங்கள். அதை நான். திருப்பி அனுப்பப்பட்டது என கூறும் தரப்பினருக்கு சாவாலாகவும் விடுகின்றேன்.

எவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக, சுதந்திரமாக செயற்பட முடியாதிருக்கின்றார்களோ அதே போன்றவர்களாகவே அவர்களும் தென்னிலங்கையில் நிகழ்ச்சி நிரலை நிறைவுசெய்யும் ஏவுகருவிகளாகவே இருப்பர்.

அந்தவகையில் சிங்கள மேலாதிக்கம் இனி வடக்கில் எடுபடக்கூடாது. அதற்கு மக்கள் தெளிவுடன் செயற்படுவது அவசியமெனவும் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version