இலங்கை

அடுத்த போப் பதவிக்கு கார்டினல் மெல்கம் ரஞ்சித் பெயர் பரிந்துரை!

Published

on

அடுத்த போப் பதவிக்கு கார்டினல் மெல்கம் ரஞ்சித் பெயர் பரிந்துரை!

  அடுத்த போப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் இலங்கை கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பெரும் உள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸின் மரணம் உலக மக்களிடையே தியரத்தை ஏற்படுத்தியுள்லது.

Advertisement

போப் இன் திடீர் மறைவு, வத்திக்கானின் அடுத்த பிரதிநிதி யார் என்பது குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த நிலையில், போப் பிரான்சிஸுக்குப் பின்னர், இலங்கையின் கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித்தை அடுத்த போப்பாக தேர்வு செய்ய பல சர்வதேச ஊடகங்கள் பெயரிட்டுள்ளன.

அதன்படி அடுத்த போப் தெரிவுக்கு சாத்தியமான வாரிசுகளின் தொகுப்பில், வொஷிங்டன் எக்ஸாமினர், பிலிப்பைன்ஸின் கார்டினல் லூயிஸ் டேகிள், பிரான்சின் கார்டினல் ஜீன்-மார்க் அவெலின் மற்றும் இத்தாலியின் கார்டினல் பியட்ரோ பரோலின் போன்ற பிற முக்கிய நபர்களுடன் கார்டினல் மெல்கம் ரஞ்சித்தும் பெயரிடப்பட்டுள்ளார்.

Advertisement

கார்டினல் மெல்கம் ரஞ்சித்தின் பாரம்பரியவாத நிலைப்பாட்டை, குறிப்பாக லத்தீன் வழிபாட்டு முறைக்கு அவர் அளித்த ஆதரவு மற்றும் ஒரே பாலின திருமணத்திற்கு எதிர்ப்பு ஆகியவற்றை வொஷிங்டன் டைம்ஸ் எடுத்துக்காட்டி, கார்டினல்கள் கல்லூரிக்குள் மிகவும் பழமைவாத குரல்களில் அவரை நிலைநிறுத்தியது.

எனினும் , அடுத்த போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநாட்டிற்கான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version