இலங்கை
எழுதுமட்டுவாழ், ஆனையிறவுச் சோதனைச் சாவடிகள் மீளவும் அகற்றம்
எழுதுமட்டுவாழ், ஆனையிறவுச் சோதனைச் சாவடிகள் மீளவும் அகற்றம்
யாழ்ப்பாணம் – எழுதுமட்டுவாழ் மற்றும் ஆனையிறவு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடிகள் மீண்டும் அகற்றப்பட்டுள்ளன.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த ஜனவரி மாதம் வடக்குக்கு வந்து திரும்பியபோது, அந்தச் சோதனைச் சாவடிகளை அகற்றும் உத்தரவைப் பிறப்பித்திருந்தார். அதையடுத்து அவை அகற்றப்பட்டிருந்தன. எனினும், பின்னர் அந்த சோதனைச் சாவடிகள் மீண்டும் போடப்பட்டன.
இவ்வாறான நிலையிலேயே, தற்போது யாழ்ப்பாணத்துக்கு அநுர மீண்டும் வந்து சென்றுள்ள நிலையில் அந்தச் சோதனைச் சாவடிகள் நேற்றுமுன்தினம் முதல் மீளவும் அகற்றப்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.