சினிமா

கூலி படத்தின் பின்னர் ஓய்வெடுக்கவுள்ள லோகேஷ் கனகராஜ்..!

Published

on

கூலி படத்தின் பின்னர் ஓய்வெடுக்கவுள்ள லோகேஷ் கனகராஜ்..!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ் இவரது இயக்கத்தில் ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ என பல வெற்றிப் படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தார் . தற்போது ரஜினி காந்துடன் இணைந்து இயக்கியுள்ள ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 14ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் தனது சமூக ஊடக பக்கத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை பகிர்ந்துள்ளார். ‘கூலி’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பெரிதும் கவனத்தை ஈர்த்து வருகிறது ஆனால் சமூக ஊடகங்களில் இருந்து இப்போது ஒரு பிரேக் எடுப்பதாக அவர் பதிவு செய்துள்ளார்.இதை தொடர்ந்து ‘கூலி’ படத்திற்கான புரொமோஷன் வேலைகள் துவங்கும் வரை லோகேஷ் கனகராஜ் பிற புதிய அப்டேட்களை பகிரும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14-ம் தேதி ரஜினி ரசிகர்களுக்கு சிறந்த அனுபவம் அளிக்கும் என எதிர்பார்க்கப்டுகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version