இலங்கை
கொளுத்தும் கோடை வெயில் ; மறந்தும் கூட இந்த உணவுகளை உண்ண வேண்டாம்
கொளுத்தும் கோடை வெயில் ; மறந்தும் கூட இந்த உணவுகளை உண்ண வேண்டாம்
கோடை காலம் என்றாலே பலரும் வெயிலின் தாக்கத்தை நினைத்து அச்சமடைவார்கள். இந்த நேரத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பலரும் சில உணவுகளையும், பானங்களையும் எடுத்துக்கொள்வார்கள்.
கோடைகாலத்தில் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் மற்றும் எந்த மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்வது அவசியம்.
டீ அல்லது காபி: கோடை நேரத்தில் அதிகளவ கப் டீ அல்லது காபி குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும், இதிலுள்ள காஃபின் மற்றும் சர்க்கரை உடலில் நீர்ச்சத்து குறைவை ஏற்படுத்துகிறது. எனவே கோடையில் உடலை நீரேற்றமாக வைத்திருக்க எலுமிச்சை சாறு பருகுவது நல்லது.
உலர் பழங்கள்: பொதுவாக உலர் பழங்கள் ஆரோக்கியமானவை மற்றும் சத்தானவை தான் என்றாலும் கோடை காலத்தில் இவற்றை குறைவாக சாப்பிட வேண்டும். உலர் பழங்களை சாப்பிடுவதால் உடலில் வெப்பம் அதிகரிக்கிறது, எனவே இதனை தவிர்ப்பது நல்லது.
இறைச்சி: கோடையில் அதிகப்படியான இறைச்சி உண்பதும் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குழம்பு மீன், சிவப்பு இறைச்சி, தந்தூரி சிக்கன் அல்லது கடல் உணவுகளை சாப்பிட விரும்பினால், இந்த நாட்களில் ஒரு மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே சாப்பிடுவது நல்லது.
கொழுப்பு நிறைந்த உணவுகள்: கோடை காலத்தில் நீங்கள் அதிக கலோரி நிறைந்த மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த உணவுகள் உங்கள் உடலையும், செரிமானத்தையும் பாதிக்கலாம்.
தக்காளி: வைட்டமின் சி நிறைந்த சத்து அதிகம் நிறைந்த தக்காளி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும், இது அதிகளவு நீர் சத்தை கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக தக்காளியானது புற்றுநோய்க்கு உதவுகிறது மற்றும் இது கோடைக்காலத்திற்கு ஏற்ற உணவாக உள்ளது.
தர்பூசணி: தர்பூசணி பழத்தில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நீர் சத்து நிறைந்த பழமாகும். இந்த தர்பூசணியில் லைகோபீன் உள்ளது, இது சூரியனின் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.
எலுமிச்சை: கோடை காலத்தில் நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க ஒரு கிளாஸ் எலுமிச்சை சாற்றை விட இனிமையானது எதுவுமில்லை. இந்த சாறு உங்கள் உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்க உதவும்.
சுரைக்காய்: அதிக நீர் உள்ளடக்கத்தை கொண்ட சுரைக்காயில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. சுரைக்காயில் உள்ள அதிகப்படியான நீர் செரிமான மண்டலத்தை சீராக்குகிறது.