வணிகம்

சிறார்களுக்கான புதிய வங்கி கணக்கு விதிமுறைகள்: பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

Published

on

சிறார்களுக்கான புதிய வங்கி கணக்கு விதிமுறைகள்: பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

இந்திய ரிசர்வ் வங்கி, 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் அல்லது குழந்தைகளின் வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்கும், இயக்குவதற்குமான வழிகாட்டுதல்களை திருத்தியுள்ளது. ஜூலை 1, 2025க்குள் புதிய வழிகாட்டுதல்களின்படி வங்கிகள் தங்கள் தற்போதைய கொள்கைகளை திருத்த வேண்டும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதுவரை, வங்கிகள் தற்போது இருக்கும் கொள்கைகளைத் தொடரலாம்.இருப்பினும், இந்த அறிவுறுத்தல்கள் கட்டாயமில்லை என்பதை நினைவில் கொள்க. வங்கிகள் அவற்றின் “இடர் மேலாண்மைக் கொள்கை, தயாரிப்பு பொருத்தம் மற்றும் வாடிக்கையாளர் பொருத்தம்” ஆகியவற்றைப் பொறுத்து வழிமுறைகளை முழுமையாகச் செயல்படுத்தலாம் அல்லது செயல்படுத்தாமல் இருக்கலாம்.பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய புதிய வழிகாட்டுதலின் முக்கிய குறிப்புகள் பின்வருமாறு:ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, வங்கிகள் எந்த வயதினரையும் தங்கள் இயற்கை அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் மூலம் சேமிப்பு மற்றும் நிலையான வைப்பு கணக்குகளை திறக்க மற்றும் செயல்படுத்த அனுமதிக்கலாம். 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட சிறார்களுக்கான வங்கிக் கணக்கு விதி:10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய சிறார்களின் சேமிப்பு மற்றும் நிலையான வைப்பு கணக்குகளை சுதந்திரமாக இயக்க வங்கிகள் அனுமதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.வங்கிகள், அவற்றின் இடர் மேலாண்மைக் கொள்கையின் அடிப்படையில் அத்தகைய கணக்குகளுக்கான தொகை, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளையும் நிர்ணயிக்கலாம். அத்தகைய கணக்குகளின் விதிமுறைகள் கணக்குதாரருக்கு முழுமையாக தெரிவிக்கப்பட வேண்டும்.18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான விதிகுறிப்பிட்ட நபர் 18 வயதை அடைந்ததும், புதிய செயல்பாட்டு வழிமுறைகளை வங்கி வெளியிடும். மேலும், பதிவுக்காக கணக்கு வைத்திருப்பவரின் கையொப்பம் பெறப்படும். வங்கி கணக்கு பாதுகாவலரால் இயக்கப்பட்டால், கணக்கின் இருப்பை உறுதி செய்யும்.மற்ற வசதிகளுக்கான விதி; ஏடிஎம் கார்டு, நெட் பேங்கிங், செக் புக்:மைனர் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இணைய வங்கி வசதி, ஏ.டி.எம்/டெபிட் கார்டுகள், காசோலை வசதி போன்ற கூடுதல் வசதிகளை வங்கிகள் இலவசமாக வழங்கலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கிகள், அவற்றின் இடர் மேலாண்மைக் கொள்கை, தயாரிப்பு பொருத்தம் மற்றும் வாடிக்கையாளரின் பொருத்தம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வசதிகளை வழங்கலாம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version