சினிமா
சிவகார்த்திகேயனை நக்கலடித்த ப்ளூ சட்டை மாறன்..! எதற்காகத் தெரியுமா..?
சிவகார்த்திகேயனை நக்கலடித்த ப்ளூ சட்டை மாறன்..! எதற்காகத் தெரியுமா..?
நடிகர் சிவகார்த்திகேயன், தனது ‘அமரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, சமீப காலமாக சினிமா நிகழ்வுகளிலும், சமூகஅரசியல் சந்திப்புகளிலும் கலந்து கொண்டு வருகின்றார். இவரது இந்த மாற்றத்தைப் பார்த்து, விமர்சகர் மற்றும் யூடியூப் சேனல் மூலம் பிரபலமான ப்ளூ சட்டை மாறன் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.2024ம் ஆண்டில் வெளியாகி அதிகளவு விமர்சனங்களை எதிர்கொண்ட படம் தான் அமரன். ஒரு வீரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் ரீதியிலும் சாதனை படைத்துள்ளது.அத்துடன் இரண்டு வாரங்களுக்கு முன்பு, சிவகார்த்திகேயன் கேரளா முதல்வரை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்திருந்தார். இந்தச் சந்திப்பு சமூக வலைத்தளங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. “சிவா அரசியலுக்கு வரப் போகிறாரா?” என்ற வதந்திகளையும் ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன், “ அமரன் படத்திற்கு முன்பு வரை தன்ர வேலையைப் பார்த்த சிவகார்த்திகேயன் இப்பொழுது சமூக ஊடகங்களில் பலராலும் பேசப்படும் நபராகத் திகழ்கின்றார். என்றதுடன் திடீரென உருவான குட்டித் தளபதி இப்படிக் கலக்குறார்.” என்று நக்கலாகவும் கூறியிருந்தார்.