இலங்கை

தகாத உறவால் பொலிஸ் அதிகாரி எடுத்த விபரீத முடிவு

Published

on

தகாத உறவால் பொலிஸ் அதிகாரி எடுத்த விபரீத முடிவு

தகாத உறவை முடிவுக்குக் கொண்டு வந்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்காக, கள்ளக்காதலியின் வீட்டின் முன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படும் பொலன்னறுவை பொலிஸ் சார்ஜன்ட், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (20) உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பொலிஸ் சார்ஜென்ட் புலஸ்திபுர பொலிஸில் இணைக்கப்பட்டு பொலன்னறுவை மூத்த பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றியுள்ளார்.

Advertisement

உயிரிழந்த சார்ஜென்ட் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும், அந்த விவகாரம் முறிந்த பின்னர் சனிக்கிழமை (19) இரவு அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று கதவை தட்டியுள்ளார்.

அந்தப் பெண் கதவை திறக்காமையால், அவர், தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெட்ரோல் கேனை ஏந்தியவாறு வந்த சார்ஜென்ட், பெண்ணின் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டி பின்னர் அதை உதைப்பதை சிசிடிவி காட்சிகள் காட்டுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

ஆனால், அந்தப் பெண் கதவைத் திறக்காததால், சார்ஜென்ட் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு முன்பாக தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் பலத்த தீக்காயங்களுக்கு ஆளான சார்ஜன்ட், ஆபத்தான நிலையில் பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (20) உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலன்னறுவை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version