இலங்கை

தேநீர் குடிக்கும் போது மறந்தும் கூட இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்

Published

on

Loading

தேநீர் குடிக்கும் போது மறந்தும் கூட இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்

நம்மில் பல தேநீர் விரும்பிகள் தேநீருடன் சில உணவுகளை சேர்த்து உண்ணுவதில் அதிகம் விருப்பம் உடையவர்கள். அந்த வகையில் தேநீருடன் சேர்த்து சாப்பிட கூடாத சில உணவுப் பொருட்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்கள் தேநீரில் காணப்படும் டானின்களுடன் வினைபுரிந்து ஒருவித கசப்பு சுவையை ஏற்படுத்துகிறது.

Advertisement

இந்த பழங்களில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மை தேநீரின் சுவையில் குறிக்கிடுகிறது அத்தோடு தேநீர் மற்றும் சாக்லேட் ஆகியவை அற்புதமான பொருத்தமாக தெரிந்தாலும் சாக்லேட்டுகள் அதிக இனிப்பு சுவையை கொண்டிருப்பதால் அது தேநீரின் சுவையை மந்தமாக்கி விடுகிறது.

அதுமட்டுமல்லாமல் தேநீர் மற்றும் சாக்லேட் ஆகிய இரண்டிலும் காணப்படும் காஃபின் ஒரு சில நபர்களுக்கு தூண்டுதலாக அமைந்து அதனால் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

அத்தோடு, காரமான உணவுகள் மற்றும் மசாலா பொருட்கள் சேர்க்கப்பட்ட உணவுகள் தேநீரின் சுவையை மிஞ்சி விடுகின்றன

Advertisement

இதனால் உங்களால் தேநீரை ரசித்து குடிக்க முடியாத நிலை ஏற்படுவதுடன் மசாலா மற்றும் தேநீர் ஆகிய இரண்டும் ஒரு சில நபர்களில் வயிறு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

அதிகப்படியான ஃப்ளேவர் கொண்ட சீஸ் கட்டாயமாக தேநீருடன் குறுக்கிடுவதுடன் அது தேநீரின் வாசனையை கட்டுப்படுத்துகிறது என்பதால் இறுதியில் தேநீரை ரசித்து பருக முடியாத நிலை உருவாகிறது.

எண்ணெய் அதிகமான மற்றும் பொரித்த உணவுகள் நிச்சயமாக தேநீரின் சுவையை மிஞ்சிவிடும்.

Advertisement

இது போன்ற உணவுகளை தேநீருடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அதில் உள்ள எண்ணெய் தன்மை ஒருவித மோசமான சுவையை ஏற்படுத்துகிறது.

இதனால் தேநீருடன் நாம் உட்கொள்ளும் சில உணவுகளை உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படாத வண்ணம் கடைப்பிடிப்பது முக்கியமாகும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version