சினிமா

நோய்வாய்ப்பட்ட மனைவியை விட்டு ஆண்கள் செல்வது ஏன்? நடிகை சமந்தா செய்த விஷயம்

Published

on

நோய்வாய்ப்பட்ட மனைவியை விட்டு ஆண்கள் செல்வது ஏன்? நடிகை சமந்தா செய்த விஷயம்

சக்சஸ்வெர்ஸ் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று பகிரப்பட்டது. அந்த வீடியோ, ‘டைரி ஆஃப் எ சிஇஒ’ என்ற Youtube பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவில் ஒரு பகுதியாகும்.அந்த வீடியோவில் ‘நோய்வாய்ப்பட்ட தன் மனைவியை விட்டு ஆண்கள் செல்வது ஏன்? உறவுகள் கைவிடுவதற்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன என்பது போன்ற விஷயங்கள் பேசப்படுகிறது. அதனை நடிகை சமந்தா லைக் செய்துள்ளார்.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், “624% சதவீதத்திற்கும் அதிகமான ஆண்கள் தங்களது நோய்வாய்ப்பட்ட மனைவியை விட்டு பிரிந்து சென்றுவிடுகிறார்கள். ஆனால், பெண்கள் பெரும்பாலும் தங்கள் நோய்வாய்ப்பட்ட கணவனை நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள்” என்கிற புள்ளி விவரத்தை குறித்து விவாதித்துள்ளது.இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 60 ஆயிரம் லைக்குகளை பெற்று வைரலாகியுள்ளது. மேலும் இந்த வீடியோவை நடிகை சமந்தாவும் லைக் செய்திருக்கிறார். மற்றபடி வேறு எந்த கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version