பொழுதுபோக்கு

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சூப்பர் குட் சுப்ரமணி… ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதி

Published

on

Loading

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சூப்பர் குட் சுப்ரமணி… ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதி

குணச்சித்திரம் மற்றும் காமெடி ரோல்களில் நடித்த சூப்பர் குட் சுப்பிரமணி புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதாகவும் அவருக்கு 4ஆம் நிலை என சொல்லப்படும் advanced stage புற்றுநோய் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவுகளுடன் சினிமாவுக்குள் வந்தவர்தான் சூப்பர் குட் சுப்பிரமணி.  சூப்பர் குட் பிலிம்ஸில் பணியாற்றியதால் இவர் சூப்பர் குட் சுப்பிரமணி என அழைக்கப்படுகிறார். இவர் பல படங்களில் உதவி இயக்குநராக நடித்துள்ளார்.அஜித்தின் சிட்டிசன் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியவர். கதையை தயார் செய்துவிட்டு சூப்பர் குட் பிலிம்ஸில் கொடுத்து ஓகே வாங்கியிருந்தார். ஆனாலும் அவரால் இயக்குநராக முடியவில்லை. எனினும் சினிமாவில் அவர் குணச்சித்திரம், காமெடி ரோல்களில் நடித்து வந்தார்.காலா, பரியேறும் பெருமாள், பிசாசு, ஜெய் பீம், வானம் கொட்டட்டும், ஹீரோ, அருவம் , கூர்கா, ரஜினிமுருகன், அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட படங்களில் காமெடி மற்றும் பல வேடங்களில்  நடித்துள்ளார். பரியேறும் பெருமாள், ஜெய்பீம் படங்களில் அவர் மிகச் சிறந்த நடிப்பை வெளியப்படுத்தி இருப்பார்.  அவர் கடைசியாக பரமன் படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு புற்றுநோய் 4 ஆம் கட்டத்தில் இருப்பதும், அவர் கடுமையான நிதி நெருக்கடியால் போராடி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version