சினிமா
மீனாவை மொத்தமாக அலட்சியப்படுத்தும் முத்து..! மனோஜின் அன்புக்காக ஏங்கும் ரோகிணி…!
மீனாவை மொத்தமாக அலட்சியப்படுத்தும் முத்து..! மனோஜின் அன்புக்காக ஏங்கும் ரோகிணி…!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மனோஜ் ரோகிணிகிட்ட பேசியதைக் கேட்டவுடனே ரோகிணி அழுகுறார். அதைப் பார்த்த மனோஜ் ஏன் அழுகுற என்று கேக்கிறார். அதுக்கு ரோகிணி நீ என்னோட கடைசி வரைக்கும் பேசவே மாட்ட என்று நினைச்சேன் அதுதான் இப்ப நீ கதைச்சவுடனே எனக்கு அழுகை வந்திட்டு என்று சொல்லுறார். மறுநாள் காலையில ஸ்ருதி ரவியப் பாத்து என்னட்ட ஒருத்தன் தப்பா நடந்துகிட்டா நீ அவன எதுவுமே செய்யமாட்டியா என்று கேக்கிறார்.அதைக் கேட்ட ரவி நீ முதலில என்னட்ட சொல்லியிருக்கோணும் என்று சொல்லுறார். இதனை அடுத்து ரெஸ்டாரெண்ட் ஓனர் ஸ்ருதிக்கு போன் எடுத்து நீங்க செய்தது தான் சரி என்று சொல்லுறார். அதனை அடுத்து ரவியும் ஸ்ருதிகிட்ட சாரி கேக்கிறார். பின் மீனா முத்துவக் காணேல என்று அண்ணாமலைகிட்ட சொல்லிக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்ட அண்ணாமலை முத்துவுக்கு போன் போட்டு எங்க நிக்கிறான் என்று மீனாவக் கேட்கச் சொல்லுறார்.இதனை அடுத்து மீனா முத்துவுக்கு போன் எடுத்து எங்க நிக்கிறீங்க என்று கேக்கிறார். அதுக்கு முத்து நைட் சவாரி ஒன்னு இருக்கு அது முடியத் தான் வீட்ட வருவேன் என்கிறார். அதைத் தொடர்ந்து ரோகிணி மனோஜுக்காக கஞ்சி காச்சிக் கொண்டிருக்கிறதப் பாத்த மீனா ஏன் உங்களுக்கு உடம்பு சரியில்லையா என்று கேக்கிறார். அதுக்கு ரோகிணி மனோஜுக்கு உடம்பு சரியில்ல என்று சொல்லுறார்.அதைத் தொடர்ந்து விஜயா ரோகிணியப் பாத்து நீ எதுக்காக மனோஜுக்கு இதெல்லாம் செய்யுற என்று கோபப்படுறார். மேலும் நீ மனோஜுக்காக எதுவும் பண்ணத் தேவையில்ல என்ர பிள்ளைய எனக்குப் பாக்கத் தெரியும் என்று சொல்லுறார். இதனை அடுத்து விஜயா மனோஜ் கிட்ட போய் இப்ப எல்லாம் சரி ஆகிடுச்சா என்று கேக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.